விவசாயி மீது துப்பாக்கி சூடு - தென்காசி போலீசார் விசாரிக்க கோர்ட்டு தடை

சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விவசாயி மீது துப்பாக்கி சூடு - தென்காசி போலீசார் விசாரிக்க கோர்ட்டு தடை
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன். இவர் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா அங்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பனை தொழிலாளியை சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

வாக்குவாதத்தின்போது பனை தொழிலாளி தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பனை தொழிலாளி தென்காசி மருத்துவமனையில் சிகிச்சைகாக கொண்டு சென்றனர். மேலும், பனை தொழிலாளி தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக எஸ்ஐ இசக்கி ராஜாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் மணிகண்டனின் தந்தை சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரணை செய்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்றும் சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீசார் வழக்கை விசாரணை செய்யக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com