சங்கராபுரம் தாலுகாவில் இணைக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்

வடபொன்பரப்பி குறுவட்டத்தை சங்கராபுரம் தாலுகாவில் இணைக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சங்கராபுரம் தாலுகாவில் இணைக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர், செயலாளர் குசேலன், வணிகசங்க தலைவர் செந்தில், பொது சேவை அமைப்பு நிர்வாகிகள் நடராஜன், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துக் கருப்பன் வரவேற்றார். சங்கராபுரம் தாலு காவில் இருந்த வடபொன்பரப்பி, அரியலூர் 2 குறுவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட வாணாபுரம் தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் வடபொன்பரப்பி குறுவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது. ஆனால் வாணாபுரம் நீண்ட தொலைவில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி வடபொன்பரப்பி குறுவட்டத்தை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவில் இணைக்க வேண்டும் என கோரி வருகிற 5-ந்தேதி சங்கரபுரம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் சீனுவாசன், விஜயகுமார், வேலு, வெங்கடேசன், கலியமூர்த்தி, சிவகடாட்சம், அசோக்குமார் நூர்தின், ஏழுமலை மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com