நெல்லையில் 7-ந்தேதி கடையடைப்பு போராட்டம் - வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

லாரிகள் மாநகரப் பகுதிக்குள் வர மாவட்ட கலெக்டர் தடை விதித்தது தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை,
நெல்லையில் வரும் 7-ந்தேதி தேதி முழு கடையடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சி பகுதியில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கு, லாரிகள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது லாரிகள் மாநகரப் பகுதிக்குள் வர மாவட்ட கலெக்டர் தடை விதித்தது தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நெல்லையில் வரும் 7-ந்தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






