நெல்லையில் புகையிலை பொருட்கள்விற்ற கடைக்கு சீல்: ரூ.25 ஆயிரம் அபராதம்


நெல்லையில் புகையிலை பொருட்கள்விற்ற கடைக்கு சீல்: ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 1 May 2025 1:55 PM IST (Updated: 1 May 2025 4:08 PM IST)
t-max-icont-min-icon

பழவூர் அருகே தமிழ்செல்வன் அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம், பழவூர், சங்கனாபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் தமிழ்செல்வன் (வயது 42), வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையை நேற்று முன்தினம் (29.4.2025) வள்ளியூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் சோதனை செய்தார். அப்போது அவர் அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்ததற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மற்றும் பழவூர் காவல் துறையினர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்செல்வனின் கடையை சீல் வைத்து அடைத்து நடவடிக்கை எடுத்தனர். அதன்படி உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து தமிழ்செல்வனின் கடை 14 நாள்களுக்கு சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story