மேயருக்கு கொடுத்த அரசு வாகனத்தில் குடும்பத்தினரோடு ஷாப்பிங் - வெளியான பரபரப்பு காட்சி

மேயருக்கு கொடுத்த அரசு வாகனத்தில் குடும்பத்தினரோடு ஷாப்பிங் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேயருக்கு கொடுத்த அரசு வாகனத்தில் குடும்பத்தினரோடு ஷாப்பிங் - வெளியான பரபரப்பு காட்சி
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயகுமார். அவரது குடும்பத்தினர் திருவள்ளூரில் உள்ள தனியார் துணிக்கடையில் மேயருக்கென்று வழங்கப்பட்ட அரசு வாகனத்தை எடுத்து வந்து சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று பெருட்களை வாங்கியது தெரியவந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அரசு வாகனங்களை அவரது குடும்பத்தினர் செந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு வலம் வருவதாக பெதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அரசு வாகனத்தில் மேயர் குடும்பத்தினர் ஷாப்பிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com