மாணவர்களை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு: பெரிய மணலியில் கடைகள் அடைப்பு

மாணவர்களை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெரிய மணலியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு: பெரிய மணலியில் கடைகள் அடைப்பு
Published on

எலச்சிபாளையம்

இரு தரப்பினர் மோதல்

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கும், பெரிய மணலி வணிகர் சங்க தலைவர் தங்கமணி என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இரு தரப்பினராக மோதிக்கொண்டனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தங்கமணி, அவருடைய மகன் பூபாலன், சேகர் ஆகிய 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடையடைப்பு

இதற்கிடையே தங்கமணி மீதான வழக்குப்பதிவை கண்டித்து பெரிய மணலியில் பொதுமக்கள் தரப்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 150-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த முயன்ற 22 பேரை போலீசார் கைது செய்து உடனே விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, மகாலட்சுமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com