கீரனூர் பகுதியில் 10 ரூபாய் நோட்டு, நாணயங்களுக்கு தட்டுப்பாடு

கீரனூர் பகுதியில் 10 ரூபாய் நோட்டு, நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கீரனூர் பகுதியில் 10 ரூபாய் நோட்டு, நாணயங்களுக்கு தட்டுப்பாடு
Published on

கீரனூர் பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.135 முதல் ரூ.165 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் மது பிரியர்களுக்கு மீதி சில்லறை கொடுக்க வேண்டி இருப்பதால் 10 ரூபாய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோட்டுகள் கிடைக்காத பட்சத்தில் யாரும் வாங்க மறுத்த 10 ரூபாய் நாணயங்களும் தற்போது அதிகளவில் புழக்கத்தில் வந்து விட்டது. பல்வேறு வங்கிகளின் லட்சக்கணக்கில் முடங்கி கிடந்த 10 ரூபாய் நாணயங்களை டாஸ்மாக் ஊழியர்கள் மொத்தமாக வாங்கி புழக்கத்தில் விட்டுள்ளனர். இவர்களின் கரிசனத்தால் 10 ரூபாய் நாணயங்களுக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. அதையும் கடந்து 10 ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com