திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதா? இந்து முன்னணி கண்டனம்

சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய்யை செயல்படுத்த வைப்பது முருக பக்தர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதா? இந்து முன்னணி கண்டனம்
Published on: 

சென்னை,

இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவை எதிர்த்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சீராய்வு மனு தாக்கல் செய்வது, அவரது தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து முடிவெடுப்போம் என்று கூறினார். இதே நிர்மல் குமார் தேர்தலின்போது திருப்பரங்குன்றத்தில் வேட்பாளராக தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீபம் ஏற்றும் விஷயத்தில் சட்டப்படி நடந்து நீதியை நிலைநாட்டுவோம் என்று பேசினார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய்யை செயல்படுத்த வைப்பது முருக பக்தர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு செய்ததன் மூலம் இவரது அப்பட்டமான இந்து விரோத எண்ணம் வெளிப்பட்டு உள்ளது. முருகனின் அருளால் இந்த தீய எண்ணம் கொண்ட த.வெ.க.வின் எண்ணம் பலிக்காது. இந்து முன்னணி இந்த நயவஞ்சக்கூட்டத்தை எதிர்த்து சட்டம் மற்றும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை துணிந்து நடத்துவோம்"என்றார்.

X