செம்மண் கடத்தல்

மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செம்மண் கடத்தல்
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரோந்து பணி

மார்த்தாண்டம் போலீசார் மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர் அனுமதியின்றி செம்மண்ணை கடத்துவதற்காக வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் செம்மண்ணை வாகனத்தில் ஏற்றி கொண்டு இருந்தவர்கள் வாகனங்களை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

கைது

அவர்களில் பம்மத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) மற்றும் பொக்லைன் எந்திரத்தின் கிளீனர் முகேஷ் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய டெம்போ டிரைவர்கள் ஜெவீஷ், விஜயன், ஜெயபால், பொக்லைன் எந்திரம் ஆபரேட்டர் அந்தோணி, உரிமையாளர் அருள்விஜு ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டெம்போ மற்றும் ஒரு பொக்லைன் எந்திரம் என 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com