புதர், மரங்களை அகற்ற வேண்டும்

புதர், மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதர், மரங்களை அகற்ற வேண்டும்
Published on

வாலாஜாபேட்டை நகர எல்லை நுழைவு வாயில் பகுதியில் அம்மூர், சோளிங்கர் போகும் 3 சாலைகள் சந்திக்கும் கூட்ரோட்டின் மத்தியில் உள்ள மேடையில் அதிகளவில் செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக வருபவரிடம் வழிப்பறி நடக்கிறது. 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்ட செடிகள், பெரிய மரமாக வளர்ந்துள்ளது. இதனால் சாலை சேதம் அடையும் அபாயம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் செடிகள், புதர்கள், உயரமாக வளர்ந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com