தர்மபுரி மாவட்டத்தில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on

தர்மபுரி கோட்டம் அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஸ்பின்னிங் மில், தேவரசம்பட்டி, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஅள்ளி எச்.பி.சி.எல்., நாகர்கூடல், பரிகம், மானியதஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோன்று வெள்ளிச்சந்தை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகேரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை தர்மபுரி, வெள்ளிச்சந்தை மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரவி, வனிதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com