நாமக்கல், மோகனூர் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல், மோகனூர் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கெண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், செல்வகணபதி நகர், தொட்டிப்பட்டி, மணியாரம் புதூர், காவேட்டிப்பட்டி, குறிஞ்சி நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதேபோல் எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ் சாத்தம்பூர், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசபாளையம், சின்னக்கரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைகாட்டு புதூர், தீர்த்தாம்பாளையம், பேட்டைப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை செயற்பொறியாளர்கள் நாகராஜன், ராணி ஆகியேர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com