தமிழக காவல்துறையில் 1,299 பணியிடங்களுக்கான எஸ்.ஐ தேர்வு: திடீரென ஒத்திவைப்பு


தமிழக காவல்துறையில் 1,299 பணியிடங்களுக்கான எஸ்.ஐ தேர்வு: திடீரென ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 10 Jun 2025 9:00 AM IST (Updated: 10 Jun 2025 10:02 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர்(தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) காலியிடங்கள் என 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. 1,299 எஸ் ஐ காலிப்பணியிடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பால் 20% ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. விளக்கங்கள் வரும் வரை ஜூன் 28, 29 -ல் திட்டமிடப்பட்டு இருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் எஸ்ஐ தேர்வுக்கான தேதி TNUSRB இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story