எஸ்.ஐ. தேர்வு தொடர்பான வழக்கு - சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்
எஸ்.ஐ. தேர்வு தொடர்பான வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கடந்த 2024-ம் ஆண்டு காவல்துறை எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக அந்த தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 4-ந்தேதி மீண்டும் எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில தேர்வர்கள் வயது வரம்பால் வாய்ப்பை இழக்கின்றனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story






