நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கிய நெல்லை எஸ்.பி.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான எஸ்.ஐ. பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை நெல்லை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
திருநெல்வேலி
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை (21.12.2025) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு பணியில் ஈடுபடும் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களுக்கு தேர்வு நடைமுறை தொடர்பாக விளக்கங்களும், அறிவுரைகளும் இன்று மாவட்ட எஸ்.பி.யால் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






