2 பேருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
2 பேருக்கு அரிவாள் வெட்டு
Published on

பாளையங்கோட்டை சாவடி தெருவைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் (வயது 51), கணேசன் (54). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே நேற்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com