பள்ளிவாசல் அருகே வீசப்பட்ட பந்து வடிவ வெடிபொருட்கள் மதுரையில் பரபரப்பு

மதுரையில் பள்ளி வாசல் அருகே வீசப்பட்ட பந்து வடிவ வெடிபொருட்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிவாசல் அருகே வீசப்பட்ட பந்து வடிவ வெடிபொருட்கள் மதுரையில் பரபரப்பு
Published on

மதுரை,

மதுரை அரசரடியில் 150 ஆண்டுகள் பழமையான ஈத்கா பள்ளிவாசல் உள்ளது. இன்று அதிகாலை ஈத்கா பள்ளிவாசல் அருகே பந்து வடிவத்தில் 2 மர்ம பார்சல்கள் கிடந்தன. இதனைப் பார்த்த காவலாளி கரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து மர்ம பார்சலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பார்சலை வெடிகுண்டு பிரிவு போலீசார் கவனமாக எடுத்து பிரித்தனர். அப்போது ஒரு பார்சலில் கரி மருந்து திரியுடன் காணப்பட்டது. இன்னொரு பார்சலிலும் சக்தி வாய்ந்த எளிதில் தீப்பற்றக்கூடிய கரிமருந்து காணப்பட்டது.

இதில் ஒரு பார்சலை போலீசார் தீ வைத்து சோதித்தனர். அது சுமார் 6 அடி உயரத்திற்கு ஜுவாலையுடன் எரிந்தது. திரியுடன் இருந்த கரிமருந்து பார்சலை போலீசார் செயல் இழக்கச் செய்து பத்திரமாக எடுத்துச் சென்றனர்.

இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com