

சென்னை,
சென்னை கோயம்பேடு மெட்ரோ அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்தி மொழியிலும் பெயர்கள் இடம்பெற்றுள்ள வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சாலையில் இந்தி மொழியிலும் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டிருப்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழக்கமாக இடம்பெறும் பெயர்களுடன் இந்தி மொழியும் இடம்பெற்றுள்ளதால், இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோயம்பேடு மெட்ரோ அருகே திடீரென இந்தி மொழியிலும் பெயர்கள் இடம்பெற்றுள்ள வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.