திருப்பரங்குன்றம்: சிக்கந்தர் தர்காவில் சிறப்பு வழிபாடு; குவிந்த இஸ்லாமிய மதத்தினர்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம்: சிக்கந்தர் தர்காவில் சிறப்பு வழிபாடு; குவிந்த இஸ்லாமிய மதத்தினர்
Published on: 

மதுரை,

திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்பு வழிபாடு நடத்த இஸ்லாமிய மதத்தினர் குவிந்துள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்கவும் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தர்காவில் இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தவும் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், மலையை சிஆர்பிஎப் படையினர் கட்டுப்பாட்டில் எடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதேவேளை, தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தர்காவில் சிறப்பு வழிபாடு

இந்நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் இன்று சிறப்பு தொழுகை வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு தொழுகை வழிபாட்டில் பங்கேற்க ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் இன்று அதிகாலையே மலைப்பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். முருகன் கோவில் மலை மீது உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமிய மதத்தினருக்கு போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர்.

தர்காவுக்கு செல்வோரின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தல் உள்ளிட்ட தீவிர பரிசோதனைக்குப்பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு தொழுகை வழிபாட்டில் பங்கேற்க வந்த இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

X