

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுக்ள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஆட்சியை விமர்சித்து திமுக, அதிமுக தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மக்கள் பிரச்சினைக்கு மவுனமாக இருப்பது ஏன்? என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது…
4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்…
ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep Silence Mode-ல! 🤐
உதயநிதி ஸ்டாலின்…
பழனிசாமி…
ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா?
மக்கள் பிரச்சனை வந்தா மவுனம்…
அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி!
தமிழக மக்கள் கேட்கிறார்கள்:
இந்த அமைதிக்கு காரணம் என்ன?
அல்லது… “மேலிருந்து” பேசக்கூடாது என்று group call Order வந்திருச்சா?
#NEETPaperLeak
இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.