தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.4½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.4½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
Published on

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடியில் தினமும் ஏலம் நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று விவசாயிகள் 738 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் பட்டுக்கூடுகள் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.686-க்கும், குறைந்தபட்சமாக ரூ.342-க்கும், சராசரியாக ரூ.609.93-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 311-க்கு வர்த்தகம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com