தர்மபுரி அங்காடியில்ரூ.16½ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

தர்மபுரி அங்காடியில் ரூ.16½ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி அங்காடியில்ரூ.16½ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
Published on

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 5,240 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,513 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 1 கிலோ அதிகபட்சமாக ரூ.583-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.11 குறைந்தது. நேற்று பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.572-க்கும், குறைந்தபட்சமாக ரூ.277-க்கும், சராசரியாக ரூ.468.85-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.16 லட்சத்து 47 ஆயிரத்து 274 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com