தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
Published on

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,992 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,312 கிலோவாக அதிகரித்தது. நேற்றுமுன்தினம் 1 கிலோ அதிகபட்சமாக ரூ.503- க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.21 விலை குறைந்து அதிகபட்சமாக ரூ.482-க்கும், குறைந்தபட்சமாக ரூ.272-க்கும், சராசரியாக ரூ.411.91-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 52 ஆயிரத்து 406 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com