பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது.
பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
Published on

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 5,585 கிலோ பட்டுக்கூடுகள் வந்தது. இது நேற்று 2,308 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.645-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவுக்கு ரூ.8 விலை உயர்ந்தது. அதிகபட்சமாக ரூ.653-க்கும் குறைந்தபட்சமாக ரூ.385-க்கும், சராசரியாக ரூ.547.78-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.12 லட்சத்து 64 ஆயிரத்து 720-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com