பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்து உள்ளது.
பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
Published on

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 3,776 கிலோ பட்டுக்கூடு வந்தது. இதனிடையே நேற்று பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,903 கிலோவாக குறைந்தது. இதனால் நேற்று பட்டுக்கூடு கிலோவிற்கு ரூ.43 விலை அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.640-க்கும், குறைந்தபட்சமாக ரூ.363-க்கும், சராசரியாக ரூ.540.35-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 592-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com