

சென்னை,
சென்னை அம்பத்தூர் பகுதியில் விநாயகர் கோவிலில் ரூ.14 லட்சம் வெள்ளி பொருட்கள் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை டைனிங் சென்டர் முதலாவது தெருவில் உள்ள ஐஸ்வர்ய விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 7 கிலோ எடையுள்ள ரூ.14 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், நெல்லையைச் சேர்ந்த சிவலிங்கம் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் சுந்தர விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை உண்டியலை உடைத்த 2 பேரில் ஒருவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடினார். பிடிபட்டவர் நேபாளத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபர் என்பதும், கட்டிட வேலை செய்து வந்த அவர் உண்டியல் பணத்திற்காக கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.