மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு - சாமியார் கைது


மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு - சாமியார் கைது
x
தினத்தந்தி 10 April 2025 9:21 AM IST (Updated: 10 April 2025 10:12 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் வேல் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை,

மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இந்த மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மருதமலை அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி உயரமுள்ள வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான வேல் இருந்தது. அங்கே கடந்த 2ம் தேதி பிற்பகல் சுமார் 12 மணி அளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் அந்த வேலினை எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பட்டப் பகலில் மருதமலை தியான மண்டபத்தில் இருந்த வெள்ளி வேலை மர்ம ஆசாமி திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றிய வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெள்ளி வேலை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருந்தனர்.

இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேலை திருடிச் சென்ற சாமியார் வெங்கடேஷ் சர்மாவை (57) போலீசார் கைது செய்துள்ளனர்.

1 More update

Next Story