ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா-ஒடிஷா நோக்கி செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,கடலூர் ,சேலம், ஈரோடு ,திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி ,தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதியே உருவாகும் என கூறப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகி உயுள்ளது . வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா - ஒடிசா நோக்கி செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com