பாஜகவின் ஆதரவு இருப்பதால் தமிழகத்தில் ஆட்சி ஓடுகிறது -டிடிவி தினகரன்

மத்திய அரசின் கிளை நிறுவனமாக அதிமுக செயல்படுகிறது. பாஜகவின் ஆதரவு இருப்பதால் தமிழகத்தில் ஆட்சி ஓடுகிறது என டிடிவி தினகரன் கூறினார். #TTVDhinakaran #Tamilnews
பாஜகவின் ஆதரவு இருப்பதால் தமிழகத்தில் ஆட்சி ஓடுகிறது -டிடிவி தினகரன்
Published on

தஞ்சை

தஞ்சையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசு கைவிட வேண்டும். எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்புக்கு பின் ஆட்சி மாறும்.

ஆர்.கே.நகரில் மக்களுக்கான திட்டங்களை தமிழக அரசு முடக்கியுள்ளது. தர்மயுத்தம் என்பது பதவிக்காக நடந்தது, பன்னீர்செல்வத்தின் உறவினர்களே தற்போது பதவியில் உள்ளனர்.

தஞ்சையில் சத்துணவு பணியாளர் நியமனத்தில் தவறான முறை பின்பற்றப்பட்டுள்ளது, ஆட்சியர் பதில்சொல்ல வேண்டி வரும்.

மத்திய அரசின் கிளை நிறுவனமாக அதிமுக செயல்படுகிறது. பாஜகவின் ஆதரவு இருப்பதால் தமிழகத்தில் ஆட்சி ஓடுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com