சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டம்

சிங்கம்புணரியில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டம்
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜேந்திரகுமார், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு வேளாண் வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு. பேசும் போது, மழைக்காலம் தொடங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைத்து பகுதிகளிலும் மின்சார துறை சார்பில் மின்சார சாதனங்களை முறையாக பராமரித்து அனைவருக்கும் முழுமையான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ ரூ.46 லட்சம் ரூபாய்க்கான 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய குழு துணைத்தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி அன்புச்செழியன், ரம்யா செல்வகுமார், உமா சோனமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார் மற்றும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கார்த்திகா, கிராம ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் பாஷா, உதவியாளர் முகமது ஷேக் அப்துல்லா, அலுவலக பணியாளர்கள், உறுப்பினர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com