

சென்னை,
சென்னையில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை -விமான நிலையம் (நீலவழித்தடம்) மற்றும் 2-வது வழித்தட மான சென்டிரல் - பரங்கிமலை (பச்சை வழித்தடம்) ஆகியவற்றின் மூலம் 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தினமும் காலை 4.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். மெட்ரோ ரெயில் டிக்கெட் கட்டணம் செலுத்த பல்வேறு நவீன மற்றும் எளிமையான டிஜிட்டல் முறைகள் உள்ளன. அனைத்து நிலையங்களிலும் பணமில்லா பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்கள் மற்றும் சேவைகள் டிஜிட்டல் முறையில் செயல்படுகின்றன.
குறிப்பாக, 'சென்னை மெட்ரோ ஆப்' செயலியை பதிவிறக்கம் செய்து, பயணச்சீட்டுகளை பெறலாம். அதேபோல், வாட்ஸ்-அப் வழியாக கியூ.ஆர். டிக்கெட் மற்றும் 'ரெட்பஸ்' போன்ற செயலிகள் மூலமும் டிக்கெட் பெறலாம். ரெயில் நிலையங்களில் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கலாம். கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் செலுத்தலாம்.
பயண அட்டை மூலம் பயணிக் கும்போது 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட் டது. ரூ.100 கட்டணத்தில் நாள் முழுவதும் தடையின்றி பய ணிக்க சலுகை டிக்கெட்டுகளைப் பெறலாம். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பயண அட்டை விலக்கி கொள்ளப்படுவதால், இன்று முதல் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- மெட்ரோ ரெயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக கடந்த 2023-ம் ஆண்டு மே 14-ந்தேதி முதல் 'சிங்கார சென்னை அட்டை' (தேசிய பொது போக்குவரத்து அட்டை) அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 'சிங்கார சென்னை அட்டைக்கு' (தேசிய பொது போக்குவரத்து அட்டை) முழுமையாக மாறுகிறது.
எனவே மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெறப்படும் கியூ.ஆர். சேமிக்கப்பட்ட மதிப்பு பாஸ் (எஸ்.வி.பி.) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறு வனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். பயணிக ளின் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என்றனர்.