சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.72.87 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

2 மாதங்களில் ரூ.72.87 லட்சம் பணமும், 51 கிராம் தங்கமும், 9.1 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாபுரி கிராமத்தில் வரலாற்று புகழ்மிக்க பாலசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த கோவிலில் தொடர்ந்து 4 செவ்வாய்க்கிழமைகளில் வருகை தந்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனை தொடர்ந்து அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் நிறைவேறியதும் பணம், தங்கம், வெள்ளிப் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் தொகை என்னும் பணி நடைபெற்றது. இதில் கடந்த 2 மாதங்களில் ரூ.72.87 லட்சம் பணமும், 51 கிராம் தங்கமும், 9.1 கிலோ வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com