

வேலூர்,
நூதன முறையில் நகையை திருடிய அக்கா மற்றும் தம்பியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா பகுதியில் உள்ள நகை கடையில் சில மாதங்களாக நகைகள் காணாமல் சென்றுள்ளது. பின்னர், நகைக்கடை உரிமையாளர்கள் தங்களது கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, குடும்பத்துடன் வந்த சிலர் நகைகளை நூதன முறையில் திருடி சென்றது தெரியவந்தது. இந்த நிலையில், கடை உரிமையாளர்கள் நகை திருடிய சிசிடிவி காட்சிகளை தங்களது வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்தனர்.
இது குறித்து நகை கடை உரிமையாளர்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றிய போலீசார் நகையை திருடிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மற்றும் தெய்வானை என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 4 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர்களிடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.