

சென்னை,
தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக இருந்த பூச்சி முருகன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வி. சிவா அதிரடியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நியமனத்திற்கான அரசாணையை பெற்றுக்கொண்ட வி. சிவா, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தீவிர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், "எனக்காக தனது சொந்த பெரம்பூர் தொகுதியை விட்டு கொடுத்தவர் சிவா" என மேடையில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.