தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா?

ஓரிருநாளில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா?
Published on

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஓரிருநாளில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com