சிவகங்கை: கல்குவாரியில் கற்கள் சரிந்து 5 பேர் உயிரிழப்பு

எதிர்பாராதவிதமாக மணல் மற்றும் கற்கள் சரிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது.
சிவகங்கை: கல்குவாரியில் கற்கள் சரிந்து 5 பேர் உயிரிழப்பு
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல இன்று வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் மற்றும் கற்கள் சரிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது. இதில் பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com