சிவகங்கை: பக்ரீத், முகூர்த்த நாட்களை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

பக்ரீத் பண்டிகை 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது
சிவகங்கை: பக்ரீத், முகூர்த்த நாட்களை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்
Published on

இஸ்லாமிய மதத்தினரான புனித பண்டிகையான பக்ரீத் வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதேபோல், இந்த வாரம் புதன், வியாழன் கிழமைகளில் (5,6ம் தேதிகள்) சுப முகுர்த்த தினம் வருகிறது. திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த தினங்களில் நடைபெற உள்ளன.

இந்நிலையில், பக்ரீத், முகூர்த்த நாட்களை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கடந்த வாரத்தில் சராசரியாக ரூ. 8 ஆயிரம் விற்பனையான ஒரு ஆடு இன்று ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, 35 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ. 50 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com