சிவகங்கை: சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
சிவகங்கை: சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (வயது 56). தொழிலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு தொழில் சம்பந்தமாக சென்றுவந்த போது அங்கு 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் பழனிசாமியை கைது செய்து, அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன், இச்சம்பவத்தில் தொடர்புடைய பழனிசாமிக்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு வாழ்நாள் சிறையும், ரூ.1000 அபராதமும், சிறுமியை கர்ப்பமாக்கியதற்கு வாழ்நாள் சிறையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com