சிவகங்கை: மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. மஞ்சுவிரட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டன. இந்த காளைகளையும் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அவற்றில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் ஓடின.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த போட்டியை பார்க்க வந்திருந்த கொரட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 70) என்பவரும் மாடு முட்டி பலத்த காயம் அடைந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
Related Tags :
Next Story






