சிவகங்கை: திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... கொந்தகை கண்மாயில் வைத்து கொடூரம் !

திருப்புவனம் வட்டத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் கொந்தகை கண்மாய் உள்ளது
கருவெல பகுதியில் சடலம் மீட்பு
இளைஞர் வெட்டிக்கொலை
Published on

சிவகங்கை,

திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராம கண்மாயில் 25 வயதுடைய இளைஞர் வெட்டி கொல்லபட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலை செய்யபட்ட இளைஞர் யார் என்றும், கொலை செய்தவர்கள் யார் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடர்ந்த பகுதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் கொந்தகை கண்மாய் உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் அதிகமாக கருவேல மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்கள் முன்பு அந்த மரங்களை அகற்றுவதற்காக வழித்தடங்களை உருவாக்கினார்கள். இன்று காலை கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதற்காக அங்கு சில நபர்கள் வந்துள்ளனர். அந்த வழிப்பதையில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியத இளைஞர்

தகவலறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை எஸ்.பி. அபிஷேக் குப்தா, டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் மற்றும் தடவியல் நிபுணர்களை வைத்து தடயங்களை சேகரித்தனர்.

விசாரணை

கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளி யார்? என்று தெரியவில்லை. கண்மாயின் அடர்ந்த இந்த பகுதியில் வழிப்பாதை அமைத்ததை தெரிந்த நபர்களால் மட்டுமே அங்கு வந்து இந்த கொடூர சம்பவத்தை செய்திருக்க முடியும். அதனால் கொலை செய்யபட்டவர் யார் என்று அடையாளம் தெரிந்து விட்டால் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத இந்த இளைஞரின் கொலை அந்த கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com