

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்ற 13 வயது பள்ளி மாணவனை, மோட்டார் சைக்கிளில் ஊரில் கொண்டு விடுவதாகக் கூறி நாகனி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு (வயது 66) என்பவர் மயானப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சுதாரித்துக்கொண்ட மாணவன் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடி சோதனைச்சாவடி போலீசாரிடம் புகார் அளித்தான். அதன்படி போலீசார் குழந்தைவேலுவை மடக்கிப்பிடித்து தேவகோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.