சிவகங்கை: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 61 ஆண்டு சிறை

மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி ரோகிணி உத்தரவிட்டு உள்ளார்.
 கருப்புசாமி
Published on

சிவகங்கை,

7 மாத கர்ப்பம்

சிவகங்கையை சேர்ந்தவர் கருப்பசாமி 26. கூலி தொழிலாளி. கடந்த 2022 ம் ஆண்டு பள்ளி மாணவியை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அச்சிறுமி 7 மாத கர்ப்பம் அடைந்தார். அவர் அந்த மாணவியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

பெற்றோர்

மாணவியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு சந்தேகமடைந்த பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதுதான் கர்ப்பம் குறித்து தெரிய வந்தது. உடனே இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மகளிர் போலீசார் கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ வழக்கு

சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோகிணி இன்று அளித்த தீர்ப்பில், கருப்புசாமிக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் விதித்ததுடன், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com