தீபாவளி பண்டிகைக்காக சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடி பட்டாசுகள் உற்பத்தி - கடந்த ஆண்டைவிட ரூ.1,000 கோடி அதிகம்


தீபாவளி பண்டிகைக்காக சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடி பட்டாசுகள் உற்பத்தி - கடந்த ஆண்டைவிட ரூ.1,000 கோடி அதிகம்
x
தினத்தந்தி 20 Oct 2025 4:00 AM IST (Updated: 20 Oct 2025 4:00 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 10 நாட்களாக இந்தியா முழுவதும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளன.

சிவகாசி,

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் கொண்டாட்டத்துக்கு தேவையான பட்டாசுகளில் 90 சதவீதம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

கடந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கான பட்டாசுகள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிக இலக்கு வைத்து பட்டாசு உற்பத்தி நடந்தது. இந்த தொழிலுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தீபாவளிக்காக சுமார் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களாக இந்தியா முழுவதும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளன. டெல்லியில் பட்டாசு வெடிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியதால், உடனடி ஆர்டர்கள் பெற்று சுமார் ரூ.400 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு உற்பத்தி அதிகம் இருந்த நிலையில், மொத்த உற்பத்தி பட்டாசுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை விற்பனை ஆகி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story