சிவாலய ஓட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
சிவாலய ஓட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை
Published on

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம் நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் நிறைவடைகிறது. 110 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் விரதம் இருந்து 12 சிவாலயங்களுக்கு ஓட்டமும், நடையுமாக சென்று சிவனை வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில், நாளை மறுநாள் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் மாவட்டத்திற்குள் கனிமவள டாரஸ் கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறையினர் செய்துள்ளனர்.

இதில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் இருசக்கர வாகன ரோந்து என மொத்தம் 44 இரு சக்கர வாகன ரோந்தில் 88 போலிசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பார்க்கிங் வசதிகளுக்காக தனி போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவ “May I Help You" சாவடிகள் நிறுவப்படும்.

பக்தர்களின் பாதுகாப்பிற்கு அவர்களின் பைகளில் Reflective strickers பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஓட்டப்படும். பக்தர்களுக்கு வழிகாட்ட 12 இடங்களில் திசை மற்றும் தூரம் காட்டும் வரைபடங்கள் நிறுவப்படும். பெண் பக்தர்களுக்கு உதவ பெண் காவலர்கள் நியமிக்கபடுவார்கள். சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கனிமவள டாரஸ் கனரசு வாகனங்கள் இரண்டு நாட்களுக்கு மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com