

கோவை,
கோவை உக்கடம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகே யன் மற்றும் போலீசார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் நின்று கஞ்சா சாக்லெட் விற்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் இலந் தைகுளத்தைச் சேர்ந்த அருண் (வயது 20) தேனி மாவட்டம் அல்லிநகரம் பழைய அரசு மருத்துவமனை ரோடு பகுதியை சேர்ந்த புவனேஸ் (22), மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த ராமன் (23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா சாக்லேட், ரூ.67 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சுந்தராபுரம்-மதுக்கரை ரோடு மோகன் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பீமா (வயது 25), மதுரை அழகர் கோவிலை சேர்ந்த அருண் பாண்டி என்ற பாக்கு (27), கொடைக்கானலை சேர்ந்த கோபிநாத் (21) என்பதும், அவர்கள், மெத்தபெட்டமின் என்ற உயர்ரக போதைப்பொருட்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்த னர். மேலும் அவர்கள், அறை எடுத்து தங்கி படிக்கும் கல் லூரி மாணவர்களை குறி வைத்து உயர்ரக போதை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 58 கிராம் மெத்த பெட்டமின் என்ற உயர்ரக போதைப்பொருள், ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது.