

சென்னை,
சுதாகரன் மற்றும் இளவரசியின் ஆறு சொத்துகள் அரசுடைமையாக்குவதற்கு, 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியான இறுதி தீர்ப்பு அடிப்படையில் சென்னை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆறு சொத்துகளை அரசின் உரிமைக்கு மாற்றுவதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.