திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
Published on

திருவலம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் அரசு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் விநாயகமூர்த்தி வரவேற்றார்.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி முகாமில் 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த பேராசிரியர்களை கொண்டு பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

நிறைவு நாளில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேராசிரியர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.

முடிவில் பல்கலைக்கழக உதவி நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com