கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 6 நாட்கள் நடந்தது.பயிற்சிக்கு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி தலைமை தாங்கினார். .உதவி இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இந்த பயிற்சியில் இயற்கை வேளாண்மையின் நோக்கம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.விவசாய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்துள்ள நிலத்திற்கு அழைத்துச் சென்று செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வேளாண்மை விஞ்ஞானி அருட்செல்வி புதிய நெல் ரகங்கள், பயறு ரகங்கள், எண்ணெய் வித்து பயிர்கள், பசுந்தாள் உரப்பயிர்களின் ரகங்கள் பற்றியும் அதன் விளைச்சல்கள் பற்றியும், பாரம்பரிய நெல் ரகங்கள் அதனுடைய மருத்துவ குணங்கள், ஆரோக்கியங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். உதவி பேராசிரியர் கருணாகரன் இயற்கை வேளாண்மையில் நுண்ணுயிர் உரங்களின் பங்களிப்பு மற்றும் உரங்கள் தயாரிப்பது பற்றியும் பேசினார். வேளாண்மை விஞ்ஞானி பிரபாகரன், துணை இயக்குனர் மத்திய திட்டம் விஜயலட்சுமி கலந்து கொண்டு பேசினர்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் வைரமுத்து தலைமையில் ஆதிச்சபுரம் இயற்கை வேளாண் அங்காடிக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் வைரமுத்து நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com