அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: திமுகவினர் ஆத்திரம் - அதிமுக பேனர்கள் கிழிப்பு

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் அவதூறாக பேசியுள்ளார்.
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அவதூறாக பேசியுள்ளார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்று குமரகுரு மீது புகார் அளிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த அதிமுகவினர், திமுக நிர்வாகிகளை பார்த்து சைகை செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், அதிமுக நிர்வாகி ஒருவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிமுக பேனர்களை கிழித்தனர்.

இதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com