சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
x
தினத்தந்தி 16 Jan 2026 9:36 AM IST (Updated: 16 Jan 2026 11:32 AM IST)
t-max-icont-min-icon

ஒரு கிலோ வெள்ளி இன்று (வெள்ளிக்கிழமை) ரூ.4,000 குறைந்து, ரூ.3,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.

நேற்றும் தங்கம் விலை உயர்ந்திருந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,290-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து உச்சத்தை எட்டி இருந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.3,000 அதிகரித்து ரூ.3,10,000-க்கும், கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.4,000 குறைந்து, ரூ.3,06,000-க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.306-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

16.01.2026 ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 ஒரு சவரன் ரூ.1,06,320

14.01.2026 ஒரு சவரன் ரூ.1,06,240

13.01.2026 ஒரு சவரன் ரூ.1,05,360

12.01.2026 ஒரு கிராம் ரூ.1,04,960

11.01.2026 ஒரு சவரன் ரூ.1,03,200

1 More update

Next Story